வேலூர்: வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ‘வேலை வாய்ப்பு முகாம்’ மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமைகளில் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்திட ஆணையர் (வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (17ம்தேதி) இம்முகாம் நடைபெற உள்ளது. தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.
இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. இந்நிறுவனங்களுக்கு 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். ஆகவே, தனியார் துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் 17ம்தேதி காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
