×

சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என்று வங்கி விதிகளில் உள்ளதா?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என்று வங்கி விதிகளில் உள்ளதா?.. தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வங்கிக்கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலை கடன் குறித்த பல்வேறு வழக்குகள் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்ட்டோரிய ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி விற்பனை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.மேலும் உரிய தொகையை கட்ட எங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களின் மீதான விசாரணையில், வங்கிகள் கடன்வாங்கி திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டால் கடன் கொடுக்க மறுக்கின்றனர். மாறாக மோசடி வேளையில் ஈடுபடக்கூடியவர்ளுக்கே கடன்கொடுகின்றனர். அவர்களிடன் சேர்ந்து வங்கி மேலாளர்கள் செய்யப்படுகின்றனர். வங்கிகள் நியாயமாக செயல்படுவதில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக வாடிக்கையாளர் ரூ.2கோடி கடன் பாக்கி இருந்தால் 20, 30 லட்சம் குறைத்து கட்டுவதாக கேட்டல் கூட வங்கி மேலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் தங்கள் கடனில் பாதி தொகையை கட்ட முன்வந்தால் கூட ஏற்றுக்கொள்கின்றனர். சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என்று வங்கி விதிகளில் உள்ளதா?..  அவர்களுக்கு தனிப்பட்ட பரிவர்த்தனைகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார். தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Tags : Baumaran ,iCort , Is there a law for the common man, a law for the big capitalists, in the banking rules, the iCourt branch question
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...