×

சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், முதல் போர்ட்டபிள் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்தது தைவான்..!!

தைவான்: தைவான் தனது முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த 1949ல் தைவான் தனியாக பிரிந்தது. தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ராணுவ பலத்தால் பெரும் நிலப்பரப்பு கொண்ட சீனாவுடன் தைவானை இணைப்போம் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. தைவானை அடிபணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள் தைவான் தீவுக்கு அருகில் அடிக்கடி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தைவானுடன் வேறு எந்த நாடுகளும் உறவு வைக்ககூடாது என சீனா எச்சரித்து வருகிறது. அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை.

எனினும், தைவானுடன் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. தைவான் ராணுவத்துக்கு ராணுவ தளவாடங்களை அமெரிக்கா சப்ளை செய்து வருகிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது. சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்திவரும் அமெரிக்க ஆளில்லா விமானம் போன்று, தைவானில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ட்ரோன் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது. 15 நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க முடியும். தங்கள் நாட்டின் கடற்கரைக்கு அருகில் உள்ள இலக்குகளைத் தாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

Tags : China ,Taiwan , China, military, portable, unmanned aerial vehicle, introduction, Taiwan
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்