தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 தாலுக்கா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, கடலூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி சார்பதிவாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நாகை வட்டாச்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாநகராட்சியில் வீட்டுவரி, தண்ணீர் வரி, கடை வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் ஒப்பந்த பணி உள்ளிட்ட அனைத்திற்கும் லஞ்சம் வாங்கபடுவதாக தொடர் புகார் வந்தது. கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அறை கதவுகளை மூடி சோதனை நடக்கிறது.

சேலம் மாவட்டம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அலுவலகத்தின் அறையை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை

திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

Related Stories: