×

ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மதுராந்தகம் ஒன்றிய தலைவர் ஏ.சி.சுரேஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முனியாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் சேகர், லத்தூர் ஒன்றிய தலைவர் மோகன், சித்தமூர் ஒன்றிய தலைவர் நிர்மல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை அந்தந்த ஊராட்சி மன்ற நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும்.

பிஎம்ஏஜிஒய், ஏஜிஎம்டி, ஜேஜேஎம் போன்ற திட்டப் பணிகளுக்கான டெண்டர் விடும் நடைமுறைகளை, அந்தந்த ஊராட்சியிலேயே மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள், ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, அப்பகுதிகளில் தொழில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிணார் அரசு, எல்.என்.புரம் சந்திரபாபு, பூங்குணம் கருணாகரன், பெருவேலி கங்காதரன் உள்பட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Tags : Panchayat ,Council , Panchayat Council Chairman, Advisory Meeting
× RELATED அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்