×

அதானி குழுமம் குறித்து புகார் அளிக்க எதிர்க்கட்சியினர் பேரணி: மல்லிகார்ஜூன கார்கே, டி.ஆர்.பாலு, வைகோ பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர். எதிர்கட்சியினரின் இந்த பேரணி செல்வதால் போலீசார் அங்கு அதிகமானோர் குவிந்துள்ளனர். அதானி குழுமம் குறித்து புகார் அளிக்கவே எதிர்க்கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இருக்கின்ற அமலாக்க துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு கொடுப்பது தான் இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இவர்களது திட்டத்தை முறியடிக்கும் விதத்தில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் மட்டுமல்லாமல் கமாண்டோ படைகளும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மூன்று அடுக்குகளாக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை வளாகம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பேரணியாக தடைகளையும் தடுத்தெறிந்து அங்கு செல்லும் வண்ணம் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்கு பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் திங்கள் கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தினுடைய பட்ஜெட் கூட்ட தொடரின் 2 வது அமர்வு துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. துவங்கிய முதல் நாளிலிருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடத்தாமல் ஒத்திவைக்க பட்டிருக்கிறது. அதே நிலையில் தான் நேற்றைய தினமும் தொடர்ந்தது. மூன்றாவது நாளாகிய இன்றும் நாடாளுமன்றத்தினுடைய இரண்டு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டிருக்கிறது.

இதற்கு காரணம் ஆளும் கட்சியை சார்ந்த எம்.பி-க்களை பொறுத்த வகையில் வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள். அதே சமயத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பப்பட்டது.

எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சி எம்.பி-க்களும் தொடர்ந்து எழுப்பிய கூச்சல் குழப்பத்தின் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களை மற்றும் மாநிலங்களை ஆகிய இரண்டு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இன்று காலை காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் 16 எதிர்க்கட்சி எம்.பி-களுடைய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொடர்ந்து அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தான் இரு அவைகளும் முடங்கி இருக்கிறது.

அதை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட உடன் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுமார் 12.30 மணிக்கு இங்கிருந்து பேரணியாக புறப்பட்டு அமலாக்க துறை அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவை பொறுத்தவரையில் இண்டென்ஸ்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்கு சந்தையில் முறைகேடு செய்திருப்பது வெளியிடப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியினுடைய எம்.பி-க்கள் பெரும்பாலான கலந்து கொண்டிருக்கிறார். அதே போன்று திராவிட முன்னேற்றக்கழக சார்பில் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக்கழகத்தினுடைய தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு  தலைமையில் எம்.பி-க்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியினுடைய பெரும்பாலான எம்.பிக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை பொறுத்தவகையில் கையில் பேனர்கள் வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கொண்டு தற்போது பேரணியாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

போலீசார் இங்கிருந்து தடுப்புகளை தகர்த் தெறிந்து செல்லக்கூடாது என்று ஒலிபெருக்கிகள் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தி  வருகின்றனர். சுமார் 200 கும் மேற்பட்ட எம்.பிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது தான் பொலிசாருடைய எண்ணமாக இருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்திலிருந்து 25 கி.மீ-க்கு அப்பால் முதல் தடுப்பு வெளி போடப்பட்டிருக்கிறது. அங்கு நின்று தான் தற்போது எம்.பிகள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். போலீசாரை பொறுத்தவரை இதற்கு மேலும் முன்னேறவேண்டும் மீறினால் கைது செய்ய படுவீர்கள் என்று எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் ஒலித்த வண்ணம் இருக்கிறார்கள்.   


Tags : Adani Group ,Mallikarjuna Kharge ,DR ,Balu ,Vaiko , Adani Group to file complaint, opposition rallies
× RELATED புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...