×

நெல்லையில் 2 பேருக்கு கொரோனா: முக கவசம் அணிய அறிவுறுத்தல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்லவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனா 3 அலைகள் உருவாகி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்களுக்கு பல்வேறு புதிய வகையான வைரஸ்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது எச்3என்1 இன்புளுயன்சா என்ற வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கமும் கொரோனாவின் தொடர் பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர்.இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி ராதாபுரம் வட்டாரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று பதிவானது. அதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் கொரோனா பதிவு ஏற்படவில்லை. இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது.

நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மாநில அளவிலான பாதிப்பு பட்டியலில், ‘’நெல்லை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பாதிப்பு என்பதால் இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிகிறது. ஆயினும் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க பொது இடங்களுக்கும் கூட்டமான இடங்களுக்கும் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது கொரோனா பரவுவதை தடுப்பதுடன் புதிய வகை வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவாமலும் தற்காத்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.



Tags : Paddy, for 2 people, corona, mask, instruction to wear
× RELATED தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58...