×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கை தேர்வு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கை தேர்வு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47-வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு அரங்கங்களும், அரசு சார்ந்த நிறுவனத்தின் அரங்கங்களும் தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த சுற்றுலா பொருட்காட்சியில், நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பொருட்காட்சி நிறைவு நாளன்று சிறந்த அரங்குகளுக்கு நினைவு பரிசு சுற்றுலா துறையின் சார்பாக வழங்கபடவுள்ளது. இதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பாரதிதேவி, கலை பண்பாட்டுத் துறை மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுந்தரவள்ளி, சுற்றுலாத் துறை இணை இயக்குநர் புஷ்பராஜ் ஆகிய மூன்று பேர் கொண்ட ஆய்வு குழு சிறந்த அரங்குகளுக்காக இந்த அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரசு துறைகளின் சார்பாக அமைக்கப்பட்ட சிறந்த அரங்குகள், அரசு சாரா நிறுவனத்தின் அரங்குகளுக்கும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது, அரங்கை தவிர அரங்கின் உள் அமைப்புகள், வெளிப்புற தோற்றத்தில் சிறந்த அரங்குகளுக்கும் தனிதனியாக பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், காவல்த்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் போன்றவைகளுக்கு சேவை அடைப்படையிலும் முதல் மூன்று பரிசுகள் பொருட்காட்சியின் நிறைவு நாளன்று வழங்கப்படவுள்ளது. இதுதவிர, சிறப்பாக செயலாற்றிய அரங்க ஒருங்கிணைப்பாளருக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது.

Tags : Chennai Metro Rail Arena ,Tamil Nadu Tourism Development Corporation , Tamil Nadu Tourism Development Corporation, Exhibition, Chennai Metro Rail Hall, Selection Committee
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்