×

வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை இருக்க கூடிய மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வர கூடிய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக புதுச்சேரியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்  26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர்; அதற்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை. மேலும், பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்தார்.


Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian , virus, flu, in tamilnadu, school, holiday, no, minister, interview
× RELATED நீட் தேர்வில் கருணை மதிப்பெண்...