விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ்: பால்வளத்துறை எச்சரிக்கை

சென்னை: விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ஒடிசாவில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவுவது முதல்முறையாக கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கால்நடைகளிடையே இந்த நோய் அதிவேகமாக பரவி வருகிறது. தோல் கழலை நோய் பசுக்களை அதிகம் பாதிக்கிறது. இதன்காரணமாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தயிர், நெய் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் பால் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், வடமாநிலங்களில் தோல் கழலை நோயால் கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்ததாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தோல் கழலை நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தோல் கழலை நோய் மற்றும் பருவகால மாறுபாட்டால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை குறைத்து விட்டதாக கூறுவது பொய்யான செய்தி என அவர் தெரிவித்தார். விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2,000 கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சங்கங்கள் கலைக்கப்படும் என பால்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: