டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றனர். விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளை ஒன்றிய அரசு முடக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.