×

பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கோயில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. அதில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிற வேளையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். இதனால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் உள்ள கோயிலில் பங்குனி விழாவை பள்ளி தேர்வு முடியும் வரை தள்ளி வைக்க கோரி முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோயில் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முருகேசன் தொடர்ந்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்து அறிவுறுத்திய நிலையில், அரசின் அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதாக விழாக்குழு ஐகோர்ட்டில் உறுதியளித்துள்ளது.


Tags : Public Examination, Temple, Festival, Loudspeaker, Avoid, Madras iCourt, Instruction
× RELATED ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய...