சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்ல வேண்டாம்: காங்கேயம் வனத்துறை சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூர் மேற்கு பகுதியிலும், கடந்த 3-ந் தேதி செம்மறி ஆடும், நேற்று முன்தினம் ஆனைக்கல் தோட்டம் பகுதியில்  கன்றுகுட்டி  ஒன்றும் சிறுத்தை அடித்து கொன்று  வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்,சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையில் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறியக்கூடிய வகையில் இப்பகுதியில் நேரடி ஆய்வு செய்து வனத்துறையினர்  சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்ததால் 7 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,இந்த கண்காணிப்பு கேமராவானது பகலில்  20 Sec வீடியோ பதிவு செய்யும் வசதியும், இருட்டில்  10 Sec image பதிவாகும் வசதி கொண்டC1 டைப் சென்சர்  கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 4 மணிக்கு மேல் மலைக்கும் மலை மேல் உள்ள கோவில்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் செல்லக்கூடாது என காங்கேயம் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து ஆங்காங்கே பல இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர் . ஊதியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: