×

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.  லாலு பிரசாத் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பலரிடம் நிலம் பெற்றுக்கொண்டு ரயில்வே பணி வழங்கியதாக லாலு உள்ளிட்டோர் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav ,Rabri Devi ,Delhi Court of Ajar , Former Bihar Chief Minister Lalu Prasad Yadav and his wife Rabri Devi appeared before a Delhi court.
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி