இறங்குமுகத்தில் தங்கம் விலை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 நாளில் மட்டும் சவரன் ரூ.1400 எகிறியது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 42 ஆயிரத்தை தாண்டியது.

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,325க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,380க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: