பெருமாளேரி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: மனு நீதி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.  இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை: ‘அரசு சார்பில் நடத்தக் கூடிய மனுநீதிநாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் மார்ச் 2023 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் நெ.51 பெருமாளேரி கிராமத்தில் வரும் 24ம் தேதி, காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்.’’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: