வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் வழிபாடு

நாகப்பட்டினம்: மேகாலயா மாநில முதல்வராக அண்மையில் பதவியேற்ற கான்ராட் சங்மா, நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் வேளாங்கண்ணி வந்தார். அவருடன் மனைவி மெஹ்தாப் வந்தார். மேகாலயா முதல்வரை, நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் மேகாலயா மாநில முதல்வர், தனது குடும்பத்தோடு கலந்துகொண்டார். பின்னர் பேராலயம் சார்பில் முதல்வரின் குடும்பத்துக்கு மாலை, மெழுகுவர்த்தி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்கு சென்ற மேகாலயா முதல்வர், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related Stories: