×

13 எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றார் சர்வதேச புக்கர் விருதுக்கு பெருமாள் முருகன் போட்டி

புதுடெல்லி: சர்வதேச புக்கர் விருதுக்கான போட்டியில் 13 எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பதிப்பிக்கப்படும் சிறந்த சிறுகதை தொகுப்பு அல்லது நாவலுக்கு சர்வதேச புக்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டிற்கான சர்வதேச புக்கர் விருதுக்கான முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 13 எழுத்தாளர்களில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் இடம் பெற்றுள்ளார்.

சேலத்தை சேர்ந்த பெருமாள் முருகன், கடந்த 2016ல் அனிருத்தன் வாசுதேவன் தமிழில் எழுதிய பூக்குழி நாவலை ‘பைர்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியை பற்றிய இந்த புத்தகத்திற்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச புக்கர் விருதுக்கான 13 எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை பெருமாள் முருகன் பெற்றுள்ளார். அடுத்ததாக வரும் ஏப்ரல் 18ம் தேதி 6 பேர் கொண்ட 2வது பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, சர்வதேச புக்கர் விருது வெற்றியாளர் லண்டனில் வரும் மே 23ம் தேதி அறிவிக்கப்படுவார். முன்னதாக, கடந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சர்வதேச புக்கர் விருதை வென்ற முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Perumal Murugan , Perumal Murugan competes for the International Booker Award among 13 writers
× RELATED காதல் கதையில் தர்ஷன், தர்ஷனா