×

பொன்னேரியில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: பொன்னேரியில் அ.ம.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அ.ம.மு.க. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அ.ம.மு.க. தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு செல்வது குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசித்தனர்.

ஒன்றியச் செயலாளர்கள் சோழவரம் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி ஆர்.முனிரத்தினம், கும்மிடிப்பூண்டி தமிழ்மணி, எல்லாபுரம் பழனி, முனுசாமி, ஆரணி பேரூர் செயலாளர் தன்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் பானுமதி, துணைச் செயலாளர் அங்கைய்யன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் மாலதி, இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் ரேகா, மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் குப்பன், மாற்றுத்திறனாளிகள் அணி செயலாளர் ரவிக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிரணிச் செயலாளர் ஞானசெல்வி, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் அன்பு, ஊராட்சி செயலாளர்கள் வாசு, பாரத், மதன், விக்ரம், சாய்மூர்த்தி, மகளிரணி சுஜாதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Ponneri , A.M.U.K. in Ponneri. Advisory meeting
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...