×

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு தலைமைச்செயலரும், பயிற்சித்துறை தலைவருமான இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆர்.ஆர்.பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும்  பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை  நடைபெற உள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.  

இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருப்பதோடு, 1ம் தேதி ஜனவரி 2023 அன்று 18 வயது பூர்த்தி  செய்தவராக இருக்க  வேண்டும். அதன்படி, பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வர்களின் விவரங்களும் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்தமாதம் 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

Tags : Tamil Nadu Government , Educated youth can apply for training for competitive examination from today to get employment: Tamil Nadu Government Notification
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்