×

கும்மிடிப்பூண்டி அருகே சோகம் குடிசை வீடு எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிபூண்டி அடுத்த கண்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (57). விவசாயி. அவருக்கு அருகருகே இரண்டு வீடுகள் இருக்கின்றன. இந்நிலையில் அவர் ஒரு வீட்டில் தூங்கியிருக்கிறார். அப்போது, அவரது இன்னொரு குடிசை வீட்டில் நேற்று நள்ளிரவில் திடீரென வீடு தீ பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த, சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், தீயை அரை மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குடிசை வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விவசாயி சேகர், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு என கூறப்படுகிறது. இந்த விபத்தில், அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த தீ காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags : Kummitypundi , Sogam cottage near Kummidipoondi destroyed by fire: Police investigation
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி