×

151 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கலாம்: மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், நேற்று மாநில அளவிலான 53வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம் தேரூர் ரேணுகாம்பாள் கோயில், தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில், திருவைகுண்டம் தம்பிராட்டி அம்மன் கோயில், திருச்செங்கோடு  சீர்காழிநாதர் கோயில், ராணிப்பேட்டை நெமிலி, சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 151 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


Tags : 151 temples can start restoration work: State expert committee approves
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்