×

12 ஆயிரம் பேர் வரவில்லை பிளஸ் 1 தேர்வு தொடங்கியது: தமிழ் தேர்வு எளிமை

சென்னை: பிளஸ் 1 வகுப்பு மாணவ மாணவியருக்கான தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று தமிழ்ப் பாடத் தேர்வு நடந்தது. அது எளிமையாக இருந்ததாக மாணவ மாணவியர் தெரிவித்தனர். மேலும் நேற்றைய தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 660 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிகளில் படிக்கும் 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவியர் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டுப் பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேரும், புதுச்சேரி பள்ளிகளில் மூலம் 14 ஆயிரத்து 376 பேரும் எழுதுகின்றனர்.  தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ்1 தேர்வல் மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 835, சிறைவாசிகள் 125 பேரும் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 தேர்வுக்காக மொத்தம் 3224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 135 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வுகளை கண்காணிக்க 43 ஆயிரத்து 200 அறைக்கண்காணிப்பாளர்கள், 3100 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில்  வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 177, கலை பாடத் தொகுதியின் கீழ் 12 ஆயிரத்து 813, தொழிற்கல்வி பாடத் தொகுதியின் கீழ் 35,931 பேர் எழுதுகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 398 பள்ளிகளில் இருந்து 42 ஆயிரத்து 122 மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். முதல் நாளான நேற்றைய தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் பெரும்  வரவேற்புடன் கூடிய வாழ்த்துகளை ஆசிரியர்கள் தெரிவித்து, மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர். மற்ற தேர்வுகள் போல இந்த தேர்விலும் தேர்வில் 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. பிளஸ் 1 தேர்வு எழுத பதிவு செய்திருந்த மாணவ மாணவியரில் நேற்று 12 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது.

Tags : 12 thousand absent plus 1 exam started: Tamil exam ease
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...