தொன்மையான 151 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 151 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (14.03.2023) மாநில அளவிலான 53-வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், முறையூர், அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், தேரூர், அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்,  தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயில், திருவைகுண்டம், அருள்மிகு தம்பிராட்டி அம்மன் திருக்கோயில், தென்காசி மாவட்டம், மேலப்பாவூர், அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அருள்மிகு வீரேஸ்வரர் முனியப்பசுவாமி திருக்கோயில், தாராபுரம் நகர்,

அருள்மிகு காடு அனுமந்தராய திருக்கோயில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, அருள்மிகு சென்றாய பெருமாள் திருக்கோயில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், அருள்மிகு ஆட்கொண்டேஸ்வரர் திருக்கோயில்,  திட்டச்சேரி, அருள்மிகு அய்யனார் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அருள்மிகு சீர்காழிநாதர் திருக்கோயில், மரப்பரை, அருள்மிகு ஈஸ்வரன்  திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், மயிலம்,

அருள்மிகு சிவஞான பாலய சுவாமிகள் திருமடம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர், அருள்மிகு அருணாச்சவேஸ்வரர் திருக்கோயில், இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  உள்ளிட்ட 151  திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள் கே.பிச்சை குருக்கள், சந்திரசேகர பட்டர், அனந்தசயனபட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி கே.தட்சிணாமூர்த்தி, கட்டமைப்பு வல்லுநர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, இராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் டி.சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: