×

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை 3 மடங்கு அதிகரிப்பு: அறக்கட்டளை நிர்வாகி தகவல்.!

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், திருப்பதி பாலாஜி கோயிலைப் போலவே இங்கும் தினமும் நன்கொடையாக பெறப்பட்ட தொகையை கணக்கிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

வழக்கத்திற்கு மாறாக ரொக்க நன்கொடைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை எண்ணவும், டெபாசிட் செய்யவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இரண்டு ஊழியர்களை நியமித்துள்ளது. நன்கொடை உண்டியலை 15 நாட்களுக்கு ஒருமுறை திறக்கப்படும். சீக்கிரமாக உண்டியல் நிரம்பி விடுவதால், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை திறக்கப்படுகிறது. 15 நாட்களில் ரூ. 1 கோடி அளவிற்கு நன்கொடை கிடைக்கிறது’ என்றார்.


Tags : Ram ,Ayodhya , Donation for Ram temple to be built in Ayodhya will increase by 3 times: Foundation administrator informs.!
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்