ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 201 காவலர்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் மற்றும் நல்லொழுக்க சான்றிதழ்கள் வழங்கும் விழா ஆவடி காவல் ஆணையரக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆவடி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 201 காவலர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இதன்பின்னர் ஆணையர் பேசும்போது; ‘’பதக்கம் பெற்ற அனைத்து காவலர்களையும் வாழ்த்துகிறேன். காவல் துறைக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும். திறமையாக பணியாற்றி மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். இந்த விழாவில், கூடுதல் காவல் இணை ஆணையர் விஜயகுமார், தலைமையிடம் நிர்வாகம் துணை ஆணையர் உமையாள், உதவி ஆணையர் கனகராஜ், கருணாகரன் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
