×

ஆகமம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத்தானா?..ஆகமம் என்பது சமஸ்கிருதத்தில் மட்டும் தான் உள்ளனவா?: தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தீர்ப்பு உள்ளபோது அதற்கு மாறாக ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று நீதிபதிகள் குழு கூறியுள்ளது. திமுக அரசால் நியமிக்கப்பட்ட திருச்சி குமார வயலூர் கோயில் அர்ச்சகர் நியமனத்தை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

அக்கோயிலில் பணியாற்றிய பிற அர்ச்சகர்களின் மனு மீது தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நீதிபதியிடமே குறிப்பிட்ட வழக்குகள் செல்வது ஏன்? என கேள்வி எழுப்பிய கி.வீரமணி, பகுத்தறிவாளர்களைக் கிண்டலடிப்பது, பெரியார், மணியம்மையார் திருமணத்தை விமர்சிப்பது இவரின் போக்காக உள்ளது என்று சாடியுள்ளார்.

ஆகமங்களை எழுதியவர்கள் யார்?:


ஆகமம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குத்தானா? ஆகமம் என்பது சமஸ்கிருதத்தில் மட்டும் தான் உள்ளனவா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆகமங்களை எழுதியவர்கள் யார்? எந்த ஆண்டில் எழுதினார்கள் என்ற கேள்விகளுக்கு இடம் உண்டா? ஆங்கிலப் புத்தாண்டில் இரவு முழுவதும் கோயில் திறப்பு எந்த ஆகமத்தின் அடிப்படையில்? வைணவத்தில் ஜாதி இல்லாதபோது அந்தக் கோயில்களில் குறிப்பிட்ட பிரிவினர் அர்ச்சகராக எப்படி விதி பொருந்தும்? திருப்பரங்குன்றம், சிதம்பரம் கோயில்கள் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது அல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வைணவக் கோயில் 108-ல் ஆகமம் தெரிந்தவர்கள் 30 கோயில்களில் மட்டுமே. தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே எனவும் கி.வீரமணி கூறியுள்ளார். மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை எல்லா விஷயத்திலுமே என்பதை நீதிமன்றம் உணர வேண்டும். தமிழ்நாடு அரசு இது குறித்து உரியவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


Tags : T.K. ,K. Veeramani , Agama, Jati, Sanskrit, T.K. Chairman K. Veeramani
× RELATED 167 ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை...