×

அதானி விவகாரம், ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி முழக்கம் காரணமாக 2-வது நாளாக முடங்கியது. அதானி விவகாரம், ஆன்லைன் சூதாட்ட விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் அலுவல்கள் அமளி காரணமாக முழுவதும் முடங்கின. மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரம் உள்ளிட்டவைகளால் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் கூச்சல், குழுப்பம் நிலவியது.

Tags : Adani ,Lok Sabha , Adani issue, online gambling issue: Lok Sabha adjourned for day due to ruling party, opposition sloganeering
× RELATED அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன