அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை இணைந்து விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் நிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். இதில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத் துறையினர் இணைந்து அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் நிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். மேலும் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகள் நலனுக்காக பள்ளப்பட்டி உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது.
தற்போது புதுப்பித்தல் பணிகள் முடிந்து உழவர் சந்தை மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி விளைவிக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், மற்றும் கீரைகள், மதிப்பு கூட்டிய பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பழமரக்கன்றுகள் ஆகியவற்றை உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்திட ஏதுவாக இலவசமாக கடை, தராசு, மின்சாரம், குடிநீர் மற்றும் இலவச கழிப்பிடம் ஆகிய வசதிகள் செய்து தரப்படுகிறது.
இங்கு வரும் விவசாயி களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படுவதுடன் இடைத்தரகர்கள் இல்லாமலும் கமிஷன் இல்லாமலும் நல்ல விலைக்கு விற்று லாபம் பெறலாம் மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை யுடன் இணைந்து உரம் விதைகள் மருந்து மற்றும் மானிய திட்டங்களுக்கு உழவர் சந்தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உணவு சம்பந்தப்பட்ட தொழில் புரிவதற்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு 35% மானியத்துடன் வங்கி மூலமாக கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இதனை விவசாயிகளுக்கு தெரிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத் துறையினர் இணைந்து அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் நிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க பள்ளப்பட்டி உழவர் சந்தையில் வந்து விற்பனை செய்து லாபம்பெற அழைப்பு விடுத்தனர். மேலும் உழவர் சந்தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் தெரிவித்தனர். இந்தஆய்வில் உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் கேசவன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் முருகன் உழவர் சந்தை பள்ளப்பட்டி ஆகியோர் மேற்கொண்டனர்.