×

தோகைமலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதி மின்கம்பம் சாய்ந்து விழுந்தது-பெரும் விபத்து தவிர்ப்பு

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலையில் தோகைமலையில் அளவுக்கு அதிகமான பாரத்தில் நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி, வளைவில் திருப்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கீழே சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்கால் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு நேற்று காலை 8 மணி அளவில் டாரஸ் டிப்பர் லாரி வந்தது. திருச்சி பாளையம் மெயின் ரோட்டில் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவில் டிரைவர் லாரியை திருப்பி உள்ளார். அப்போது லாரி அதிவேகமாக வந்ததால் திருப்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உயர்மின்அழுத்த மின்கம்பத்தில் மோதி கீழே சாய்ந்தது.

இதில் மின் கம்பம் முறிந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டது. இதனால் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பிகளாலும், லாரி மீது விழுந்த மின்கம்பிகளாலும் மின்சாரம் தாக்காமல் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தடுக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் சிக்கிய டிரைவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் வெகாட்டுப்பட்டியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் பீட்டர் ஜேம்ஸ் என்பது தெரியவந்தது. மேலும் தோகைமலை மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அறுந்து கிடந்த மின்கம்பிகளையும், முறிந்து கிடந்த மின் கம்பத்தையும் அகற்றினர். பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை அகற்றிய பின்பு புதிய மின்கம்பத்தை நட்டு மின்கம்பிகளை இணைத்தனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் மின்சாரம் வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சி மெயின் ரோட்டில் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவில் கருப்பசாமி கோவில் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தோகைமலையில் அளவுக்கு அதிகமான பாரத்தில் நிலக்கரி ஏற்றி வந்த டாரஸ் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கீழே சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dogaimalai , Tokaimalai: In Tokaimalai, Karur district, a Taurus tipper lorry loaded with heavy coal overturned on a curve.
× RELATED தோகைமலை அருகே அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்