×

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு!!

மதுரை : வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது.  வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , பிரசாந்த் உம்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வு, இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவுக்கு 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க முடியாது. இதில் தமிழகத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பத்து நாட்களுக்குள் அதாவது மார்ச் 20ம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பாஜ நிர்வாகி பிரசாந்த் உம்ரா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளந்திரேயன் முன்பு ஆஜரானார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலேயேயும் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். முன்ஜாமீன் வழங்கக் கூடாது, என வாதிட்டார். இதனை
பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது போன்ற வீடியோக்கள் பதிவு செய்வதை பார்க்கும் போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் போலி வீடியோவால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவுகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தார். மேலும் இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்

Tags : BJP ,Prashant Umra ,Tamil Nadu , Diaspora, Workers, BJP, Administrator, Prashant Umra
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...