பெங்களூரு ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ட்ரம்மில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுப்பு!!

பெங்களூர் : பெங்களூரு ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ட்ரம்மில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை அடைய செய்துள்ளது. பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் பிளாஸ்டிக் ட்ரம்மை வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி-யில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் அவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இறந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதே போல யஸ்வந்த்ப்பூர் ரயில் நிலைய நடைபாதையில் பிளாஸ்டிக் ட்ரம்மில் இளம்பெண் உடல் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. ஒரே பாணியில்  அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறுவதால் சீரியல் கில்லர்களின் கைவரிசையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: