×

நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியது இந்திய விமான நிலைய ஆணையம்

டெல்லி: நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை இணைஅமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறினார்.

மேலும் தேசிய நிதிமையமாகும் திட்டத்தின் படி 2025-ம் ஆண்டு வரை 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒத்துக்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, ஆமதாபாத், கவுகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 8 விமான நிலையங்கள் பொது, தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் அதில் கிடைக்கும் வருவாயை, அனைத்து விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப்  பணிகளுக்கு உபயோகிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை இணைஅமைச்சர் வி.கே.சிங் கூறினார்.


Tags : Airports Authority of India , 25 Airports, Allotment on Lease, Airports Authority of India
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...