×

விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த பின்பு, பயணத்தை ரத்து செய்தால் வரித்தொகையை முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவு!!

டெல்லி : விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் வரிகள் மற்றும் இதர சேவை கட்டணங்கள் அனைத்தும் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுமையாக திருப்பி தர ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கேட் முன்பதிவு செய்யும் போது, வரிகள், பயனாளர் வசதி கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தே வசூலிக்கிறது. ஆனால் பயணத்தை ரத்து செய்யும் போது இந்த தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி அளிப்பதில்லை என்பது குற்றச் சாட்டாகும்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி சோமு கேள்வி எழுப்பி இருந்தார். விமான நிறுவனங்களை இந்த விஷயத்தில் வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கனிமொழி சோமு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த பின்பு, பயணத்தை ரத்து செய்தால் வரித்தொகையை முழுமையாக திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 


Tags : Union Govt , Flight, Ticket, Booking, Tax, Union Govt
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...