×

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.3 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டில் 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கில்
448 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 200 கிமீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதேபோல் பப்புவா நியூ கினியாவின் பல்வேறு பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்தும் அறியப்படாமல் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. சில லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் பப்புவா நியூ கினியா தீவு நாடு, நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.



Tags : Papua New Guinea ,Richtor , : Papua New Guinea, earthquake
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்