×

ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து!!

புவனேஸ்வர்: ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு மணற்சிற்பம் வடிவமைத்து சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் உலகில் அரங்கேறும் அனைத்து நிகழ்வுகள் தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். இதற்காக அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Tags : suderson patnayak ,indians , Oskar, Indians, Sand sculpture, Sculptor, Sudarsan Patnaik
× RELATED மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை!