செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பழுதான டயருடன் இயக்கப்படும் மாநகர பேருந்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு‌: பழுதான டயருடன் இயக்கப்படும் மாநகர பேருந்து டயரை சரி செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு - தாம்பரம் இடையே செல்லும் (தடம் எண் 500) மாநகர போக்குவரத்து கழக பேருந்தின் பின் டயர் மிகவும் மோசம் அடைந்த நிலையில், விரிசல் ஏற்பட்டு அபாயகரமாக காட்சி அளிக்கிறது. இப்பேருந்தில், காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமாக பயணிகள் பயணம் செய்வது வழக்கம். பேருந்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டால்  மிகப் பெரிய விபத்து ஏற்படும்.

எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக பேருந்தின் டயரை மாற்றி அமைத்து அதன்பிறகு மக்கள்  பயன்பாட்டிற்கு பேருந்தை அனுமதிக்க வேண்டும். நிர்வாகம் உடனே இதில் தலையிட்டு இதை சரி செய்ய வேண்டும்  என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: