×

எலப்பாக்கம் - மதுராந்தகம் இடையே பள்ளி நேரத்தில் மாணவர்களுக்காக அரசு பேருந்து கூடுதலாக இயக்கம்: எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்: எலப்பாக்கத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் வழியாக மதுராந்தகம் வரை மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர அரசு பேருந்து இயக்கத்தை சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் கிராமத்தில் இருந்து (தடம் எண்-77 சி) அரசு பேருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்தப்பேருந்தை பள்ளி நேரங்களில் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 8.30 மணிக்கு எலப்பாக்கத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் வழியாக மதுராந்தகத்திற்கு செல்லவும், அதேபோன்று மாலை 4 மணிக்கு மதுராந்தகத்தில் அச்சிறுப்பாக்கம் வழியாக எலப்பாக்கத்திற்கு இயக்கப்படுகிறது. இதற்காக, பேருந்து இயக்க துவக்க நிகழ்ச்சி எலப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்றது.

இதில், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் தம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஊராட்சி  தலைவர்  ஆதிலட்சுமி கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்தை கொடியசைத்து இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, 77-ஏ தடம் எண் கொண்ட பேருந்து கட்டுக்கரணை கிராமத்திற்கு சென்று ராமாபுரம். எண்டத்தூர், உத்திரமேரூர், தாம்பரம் செல்லும் மற்றொரு பேருந்தும்  இயக்கப்பட்டது.


Tags : Ellapakkam ,Madhurandagam ,MLA , Additional government bus operation between Ellapakkam-Madhurandagam for students during school hours: MLA flagged off
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...