×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வேதகிரீஸ்வரர் கோயிலில் கால்கோள் விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கால் கோல் விழா நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் பிரசித்திபெற்ற சிவ தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் மிகவும் விமரிசையாக சித்திரை திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழாவை முன்னிட்டு கால் கோள் விழா எனப்படும் பந்தக்கால் நடும் விழா நேற்று தாழக்கோயில் வளாகத்தில் நடந்தது.

அப்போது, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியம் முழங்க இந்த நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kalkola festival ,Vedakriswarar ,Chitrai festival , Kalkola festival at Vedakriswarar temple on the occasion of Chitrai festival
× RELATED திருக்கழுக்குன்றத்தில் மின்...