×

மாம்பாக்கத்தில் 12ம் வகுப்பு தேர்வினை கோட்டாட்சியர் ஆய்வு

திருப்போரூர்:  தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் அடங்கிய மாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 351 பேர் தேர்வு எழுதினர். 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், தாம்பரம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏஞ்சலோ இருதயசாமி உடன் இருந்தார்.

Tags : Mambakkam ,Kotatsiyar , 12th class examination in Mambakkam will be examined by Kotatsiyar
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...