×

அரியன்வாயல் பகுதியில் ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை மீட்க கோரிக்கை: கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியன்வாயல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அவசியத் தேவைகளான சமுதாயக்கூடம், துணை சுகாதார நிலையம், மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், உடற்பயிற்சிக் கூடம், நூலகம் ஆகியவற்றை அமைக்க அரசு நிலங்கள் வேண்டும். இந்த கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள், கிராம நத்தம் நிலங்கள் உள்ளன. அந்த அரசு நிலங்கள் முறையாக அளவீடு செய்யாமலும், அடையாளப்படுத்தப்படாமலும் உள்ளது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தனி நபர்கள் சிலர், அந்த அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவையும் முறையாக பராமரிக்கப்படாததால் மழைநீர் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. அதனால் கொசு அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், பொன்னேரி வருவாய் துறைக்கும் புகார்மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு நிலங்களையும், வாய்க்கால் புறம்போக்கு நிலங்களையும் மீட்டு இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தவோம் என்று இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Arianwayal , Demand for recovery of encroached government lands in Arianwayal area: Public petition to collector
× RELATED கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்