×

12ம் வகுப்பு பொதுத் தேர்வு; திருவள்ளூர் மாவட்டத்தில் 41,981 மாணவர்கள் எழுதினர்: கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: ேநற்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். தேர்வை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது.  திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 134 மையங்களில் இந்த பொதுத் தேர்வு நடைபெற்றது. 2 கல்வி மாவட்ட மையங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற நிலையில், பொன்னேரி கல்வி மாவட்ட மையம் சார்பாக 93 பள்ளிகளிலும், திருவள்ளுர் கல்வி மாவட்ட மையம் சார்பாக 41 பள்ளிகளிலும் இந்த பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. 67 அரசு பள்ளிகளிலும், 2 ஆதிதிராவிடர் துறையைச் சேர்ந்த பள்ளிகளிலும், அரசு நிதி உதவி பெறும் 16 பள்ளிகளிலும், 49 மெட்ரிகுலேஷன்  பள்ளிகளிலும் என மொத்தம் 134 பள்ளிகளில் இந்த பொதுத் தேர்வுகள் நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் எந்தவிதமான பிரச்சனையுமின்றி பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தனியார் முறையில் எழுதும் தேர்வர்கள் 1,080 பேர் ஆவர். இதில் புழல் சிறையைச் சேர்ந்த 70 மாணவர்களும் பொதுத் தேர்வு எழுதினர். 2,750 பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பறக்கும் படை என்ற முறையில் அந்தந்த பள்ளிகளுக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்வதற்காக 285 நபர்களையும், ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டுப்பாட்டு அறையை பராமரிப்பதற்காகவும் மட்டுமின்றி, அந்த பள்ளியில் உள்ள தேர்வு 607 முக்கிய கண்காணிப்பாளர்களும், 167 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் யாவரையும் அந்த பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளிக்கு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுத் தேர்வுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் இந்த தேர்வு மையங்களில் இல்லாமல் வேறொரு பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று இந்த ஆர்.எம். ஜெயின் மேல்நிலைப் பள்ளியில்,  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். இப்பள்ளியில் தேர்வு எழுதக்கூடிய 271 மாணவர்களில் 10 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.  261 மாணவர்கள் தேர்வுக்கு வருகை புரிந்துள்ளனர். இரண்டு நபர்கள் சிறப்பு முன்னுரிமையில் பிறர் உதவியுடன் தேர்வு எழுதுகின்றனர். அந்த இரண்டு நபர்களுக்கும் ஒரு மணி நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 261 நபர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் த.இராமன் உடன் இருந்தார்.

Tags : Tiruvallur , 12th Class General Examination; 41,981 students wrote in Tiruvallur district: Collector's in-person inspection
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்