×

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா?..ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் ஐகோர்ட் கேள்வி

சென்னை: அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ‘‘கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. எனவே, தற்போது இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என்று இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை  உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில், பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.\ இதை ஏற்ற நீதிபதி, பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து  விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Bannerselvam Party , Is the post of AIADMK coordinator expired?
× RELATED நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவில்...