×

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் நன்கு தேர்வு எழுதி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நற்பெயரை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது வினாத்தாளில் உள்ள கேள்விகளில் மட்டும் கவனம் செலுத்தி உரிய பதிலை எழுத வேண்டும். மனம் தளராமல், நம்பிக்கையோடு தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று என்பதை கருத்தில் கொண்டு தேர்வு எழுத வேண்டும்.

Tags : GK ,Vasan , GK Vasan congratulates Plus 2 students
× RELATED 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி