இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* எல்.முருகன்(ஒன்றிய இணை அமைச்சர்): யானைகளை பராமரிக்கும்  தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான  எலிஃபன்ட் விஸ்பரர்ஸ், உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர்  விருதை  வென்றிருக்கிறது. தமிழனாகவும், இந்தியனாகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும்  அளிக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனருக்கு வாழ்த்துகள்.

* ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): இந்திய திரையுலகை புகழின் உச்சிக்கு கொண்டு  சென்ற, ஆஸ்கர் விருது பெற்ற நம் நாட்டின் ஆர்ஆர்ஆர் மற்றும் எலிஃபன்ட்  விஸ்பரர்ஸ் படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு, படக்குழு மென்மேலும் பல்வேறு உயரிய விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

* அன்புமணி(பாமக தலைவர்): ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின்  நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் மரகதமணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரிப்பதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளபொம்மன்- பெள்ளி இணையரின் தியாகம் போற்றத்தக்கது.

* டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

Related Stories: