சென்னை: ஆஸ்கர் விருதுகளை வென்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படகுழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுமலை தம்பதி தொடர்பான இந்திய ஆவண குறும்படம் ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் வென்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதன் முதலில் இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததை விட சிறந்த செய்தி எதுவும் இல்லை. அனைத்து விருதுக்கும் இந்த ஆவணப்படம் தகுதியானது. மேலும், ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது ‘நாட்டு நாட்டு’ பாடல். இந்த மகத்தான சாதனையை படைத்த ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.