வரும் 22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா, குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: