×

பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தகவல் மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு

சென்னை: அதிநவீன வசதிகளுடன் ஜூன் மாதம், மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்தனர். சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியா கண்டத்தின் அதிநவீன நூலகத்தை, அண்ணாவின் 102வது பிறந்தநாள் அன்று கலைஞர் 2010ம் ஆண்டில் திறந்து வைத்தார். இந்நிலையில், புத்தக வாசிப்பு வாய்ப்பினை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை புதுநந்தம் சாலையில்  2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டட பரப்பளவில் 7 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இதில் நூலக கட்டுமானத்துக்கு ரூ.99 கோடி, நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை வாங்க ரூ.10 கோடி, தொழில் நுட்ப சாதனங்களுக்கு ரூ.5 கோடி என மொத்தம் 114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் அடிதளத்தில் வாகன நிறுத்தத்துமிடம், வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாடு கூடம் முதல் தளம் முதல் 6 தளம் வரை இரண்டு லட்சத்துக்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகள் உள்ளது. 7 மாடி நூலகம் முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் அமைக்கப்படுகிறது. இங்கு, இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டுகள், ஆறு லிப்ட் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.

மேலும், செல்ப்சர்வீஸ் உணவு கூடம், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக தரைத் தளத்தில் மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள், 200 பைக், ஸ்கூட்டர்களை நிறுத்தும் வசதி மதுரை நூலகத்தில் அமையும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியல், தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் ஜூன் மாதம் நூலகம், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்தார். பொதுப்பணித்துறை உயர்அதிகாரி  ஒருவர் கூறுகையில்: நூலகத்துக்கான நாற்காலி, மேசை, சோபா உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு உயர்தரத்தில் நூலகம் அமைகிறது என தெரிவித்தார்.

Tags : Public Sector High Officials ,Madura , Public Works Department High Officials Information Artist Library in Madurai with state-of-the-art facilities to be inaugurated in June
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...