×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம்: அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Chief Whip ,Korada Kovi.Chezhian , DMK assembly members meeting on 21st under the leadership of Chief Minister M.K.Stalin: Chief Whip Korada Kovi Chezhian announced
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...