×

ஒடிசாவில் 13ம் நூற்றாண்டு கோயில் கண்டுபிடிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலின் அடிப்பகுதி உள்ளிட்டவை பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் இன்டாக் குழுவால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படச்சனா பகுதியில் சிறிய  குன்றின் அடிவாரத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் கோயிலின் இடிபாடுகள் கிடந்த இடங்களில் இன்டாக் குழு ஆய்வு செய்து வந்தது. இதில் கோயிலின் அடிப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோயில் 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாக குழு தெரிவித்துள்ளது. மேலும் சற்று தொலைவில் கோயில் கலசமும் கண்டெடுக்கப்பட்டள்ளது.



Tags : Odisha , 13th century temple discovery in Odisha
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை